
நாட்டு மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஊழல் அமைச்சர்களை உள்ளே தள்ளுவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூளூரைத்தார்.
பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று நான் பிரதமராக பதவியேற்கும் வேளையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறையில் தள்ளுவேன் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷை ஆதரித்து பிரசாரம் செய்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு சூளூரைத்தார்.
நாட்டை கொள்ளையடித்து மக்களின் சிறப்பான வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியவர்கள் இந்த ஊழல் அமைச்சர்கள்.
எனது தலைமையிலான அரசாங்கம் ஊழலுக்கு எதிராக போராடும் நிலையில் இதற்கு முன் பதவியில் இருந்து ஊழல் செய்த அமைச்சர்கள் நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவர்கள் என்றார்.

