இறுதிவரை பிரபாகரன் விலை போகவில்லை! பத்து தொகுதியில் அவர் வெற்றி பெறுவது உறுதி

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனை விலை கொடுத்து வாங்குவதற்கு லட்சணக் கணக்கில் பேரம் பேசினார்கள்.

ஆனால் கொள்கை பிடிப்பு கொண்ட பிரபாகரன் இறுதிவரை அணி தாவவில்லை.

அதனால் பத்து நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரபாகரன் ஒரு இளம் வேட்பாளர். பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி இருக்கிறார்.

அணி தாவும் படி அவருக்கு பல திசைகளில் இருந்து கோடிக்கணக்கில் பேரம் பேசினார்கள்

பிரபாகரன் என் மகனை போன்றவர். சுருக்கமாக சொன்னால் சிவாஜி தி போஸ் மகனாவார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பத்து நாடாளுமன்ற தொகுதியில் பத்து முனை போட்டி ஏற்பட்டாலும் பிரபாகரன் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

தியான் சுவா பற்றி நமக்கு கவலை இல்லை. அவரை விட்டுத் தள்ளுங்கள்.

பத்து நாடாளுமன்ற தொகுதியில் பிரபாகரன் அமோக வெற்றி பெறுவதை வாக்காளர்கள் உறுதி செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

செந்தூல் தாமான் டத்தோ செனுவில் நேற்றிரவு நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் பிரச்சாரம் கூட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் அலையென கலந்து கொண்டு பிரபாகரனுக்கு ஆதரவு வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles