
மா.பவளச்செல்வன்
ஷா ஆலம் செப் 15-
இந்த நாட்டில் இந்திய சமுதாயத்தின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும் என்று ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தற்போது நாட்டில் ஆட்சிப் புரிந்து வருகிறது.
இந்த அரசாங்கத்தில் மஇகா அங்கம் வகித்து வகித்து வருகிறது.
நாட்டில் நிலையான ஆட்சி, அதன் வாயிலாக நாட்டின் பொருளாதார மேம்பாடு, மக்களின் நழ்வாழ்வு என்ற அடிப்படையில் மஇகா இம்முடிவை எடுத்துள்ளது.
ஹலால் சான்றிதழ், 3ஆர் விவகாரம், மெட்ரிகுலேசன் கல்வி வாய்ப்பு, தேசிய கல்வி முறை, தாய்மொழிப் பள்ளிகள், சொஸ்மா சட்டம் என அனைத்து விவகாரத்திற்கும் மஇகா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை மஇகா தொடர்ந்து போராடும் என்று அவர் சொன்னார்.

