தேசிய முன்னணி மீண்டும் மிகப்பெரிய எழுச்சியை பெறும்! டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி முழக்கம்

மா.பவளச்செல்வன்

ஷா ஆலம் செப் 15-
தேசிய முன்னணி மீண்டும் மிகப்பெரிய எழுச்சியை பெறும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளுக்கு வயதானாலும் அக் கட்சிகள் என்றும் சோரம் போனதில்லை.

அக் கட்சிகள் நிச்சயம் மீண்டும் எழுச்சி பெறும் என்று ம இகா தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு தெரிவித்தார்.

மஇகாவுக்கு 78 வயதாகிறது. இதே போன்று அம்னோ, மசீசவுக்கும் வயதாகி விட்டது.
.

வயதாகி விட்டதால் அக்கட்சிகள் சோரம் போய்விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம்.

அக்கட்சிகள் இன்னமும் வலுவாக உள்ளன. விரைவில் தேசிய முன்னணி மிகப் பெரிய எழுச்சியை பெறும்
என்று அவர் சொன்னார்.

தேசிய முன்னணி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய முன்னணிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கும் ம இகாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles