
டமான்சாரா, செப் 15-
கொல்லிமலை மாசி பெரியண்ணன் சுவாமி கோவில் கம்போங் சுங்கை காயூ ஆரா டமான்சாரா வருடாந்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
அண்ணன் மாலை முனி, செல்லம், ராஜேந்திரன் சகோதரர்களின் தலைமையில் இந்த கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.
இன்று காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிற்பகலில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பகிஹியா மனோ பரமசிவம், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், இளம் தொழில் முனைவர் சுப்ரா, பத்திரிகையாளர் செ.வே.முத்தமிழ் மன்னன், புக்கிட் கியாராவைச் சேர்ந்த ரவி பரமசிவம், டத்தோ ராஜூ உட்பட பலரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு பக்தர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணன் மாலை முனி தெரிவித்தார்.

