வரும் புதன்கிழமை அமைச்சரவையில் ஹலால் சான்றிதழ் விவகாரம் விவாதிக்கப்படும்!துணை பிரதமர் அறிவிப்பு

மா பவளச்செல்வன்

ஷா ஆலம், செப்.15-
வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஹலால் சான்றிதழ் விவகாரம் விவாதிக்கப்படும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்..

நாட்டிலுள்ள உணவகங்கள் அனைத்தும் ஹலால் சான்றிதழை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும் என முடிவை அரசு எடுக்கவில்லை.

இருப்பினும் முஸ்லிம் அல்லாத உணவக உரிமையாளர்கள் சிலர் ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் நாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என ஷா ஆலமில் நடைபெற்ற மஇகாவின் 78ஆவது பொதுப் பேரவையை தொடக்கி வைத்தபோது அவர் கூறினார்.

வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவையில் ஹலால் சான்றிதழ் விவகாரத்தின் முழு விவரத்தை பிரதமர் துறையின் சமய விவகார பிரிவு அமைச்சர் முகமட் நாயிம் மொக்தாரை தெரிவிக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles