தாய்மொழிப் பள்ளிகள் ஒவ்வொரு இன் மக்களின் உரிமையாகும்!துணை பிரதமர் கூறுகிறார்

ஷாஆலம்: செப் 16-
தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் வாழும் ஒவ்வொரு இன மக்களின் உரிமையாகும்.

ஆகையால் இப் பள்ளிகள் குறித்து கேள்வி எழுப்புவதும் வழக்கு தொடர்வதும் அநாகரிகமாகும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நேற்று மஇகாவின் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு தெரிவித்தார்.

சொஸ்மா சட்டம் குறித்து மஇகா மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அது பொதுவாக விவாதிக்க முடியாது.

நிச்சயம் அமைச்சரவையில் இது குறித்து தீர்க்கமான முறையில் விவாதிக்கப்படும் என்றார்.

நாட்டில் உள்ள உணவகங்கள் ஹலால் சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும் என ஊக்குவிக்கப்படுகிறது. ஹலால் சான்றிதழ் உணவகங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

இருந்தாலும் அந்த சான்றிதழை கொண்டிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles