எம்.பி. சம்பளத்தை மக்களுக்கே வழங்குகிறேன்! உலு சிலாங்கூரில் இலவச மருத்துவ வசதிகள்! டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் வாக்குறுதி

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் வெற்றி பெறுவது உறுதி என்று வர்ணிக்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றதும்
உலு சிலாங்கூர் மக்களின் நலனக்காக உருவாக்கப்படும் சிறப்பு நிதியில் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை சேர்ப்பேன்.

அந்த நிதியில் 30 விழுக்காடு இளையோர் மேம்பாட்டிற்கும் 30 விழுக்காடு மகளிர் மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சிக்கும் எஞ்சிய தொகை தொகை சுகாதார நோக்கங்களுக்கும் செலவிடப்படும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் வாக்குறுதி அளித்தார்.

உலு சிலாங்கூர் மக்களுக்கு அதிக அளவில் இலவச மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்வேன்.

நான் உலு சிலாங்கூர் மண்ணின் மைந்தர் என்பதால் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை செய்வேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles