
பத்துகாஜா,அக்04: உலகம் தொழில்துறை புரட்சி 4.0 நோக்கி அதீத இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில் உலக சூழலுக்கு ஒப்ப மலேசியர்களும் தங்களை அந்நிலைக்கு தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் நினைவுறுத்தினார்.
மலேசியர்கள் உலக சவால்களை எதிர்கொள்ளவும் அதன் வளர்ச்சி மேம்பாடுகளில் விடுப்படாமல் இருக்கவும் மலேசிய மடானி அரசாங்கமும் தொழில்திறன் கல்வி (TVET) சார்ந்த முன்னெடுப்புகளையும் செயல்பாடுகளையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
உலக சவால்களுக்கு மலேசியர்களையும் ஆயத்தமாக்கும் வகையில் அரசாங்கம் நாடு முழுவதுக் தொழில்திறன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்று தனியார் துறைகளையும் இக்கல்வியில் முதலீடும் கவனமும் செலுத்த் பெரும் ஊக்குவிப்பை ஏற்படுத்தி வருகிறது.இவ்விரு துறையாலும் அதிகமான வாய்புகள் நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
இன்றையச் சூழலில் உலகம் முழுவதும் தொழில்திறன் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.உலகமே அதனை நோக்கி நகர்கிறது என்பதையும் எடுத்துரைத்த அவர் தொழில்துறை புரட்சி 4.0க்கு இணங்க இந்த 21ஆம் நூற்றாண்டின் திறன்களை மையமாகக் கொண்டு TVET மலேசியாவில் ஒரு புதிய சகாப்தத்தில் கால் பதிக்கிறது என்றார்.
மேலும்,நாட்டின் தொழில்துறை கல்வி திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு,ஆட்டோமேஷன் மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை தொழில்துறை கல்வி முறை வலியுறுத்துகிறது.
இது உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட தொழில்நுட்பத் துறையில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, அரசாங்கம் தொழில்துறை ஒத்துழைப்புடன் முன்முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்துகிறது, அனுபவமிக்க கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது, மேலும், இளைஞர்களுக்கான அணுகலை விரிவுபடுத்துகிறது. மிகவும் திறமையான மற்றும் ஆற்றல்மிகு பணியாளர்களை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை முதன்மை மூலதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற நம்பிக்கையையும் அவர் பதிவு செய்தார்.
இந்நிலையில், பத்து காஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் TVET கல்விக்கு எப்போதும் ஊக்கத்தையும் முன்னுரிமையையும் அளிக்கிறது. அது தொடர்பில் பத்துகாஜாவில் இயங்கும் PESDEC (Perak Entrepreneur and Skills Development Centre), தொழில்துறை கல்வி மையத்தில் பயிலும் மாணவருக்கு மடிக்கணினியை பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் வழங்கிய பின்னர் அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
PESDEC என்பது உள்ளூர் பணியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க திறன்கள் மற்றும் தொழில்முனைவு திட்டங்களை வழங்கும் ஒரு பயிற்சி மையமாகும். தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பயிற்சியை மையமாகக் கொண்டு, தொழில்துறைக்கான பொருத்தமான திறன்களை வளர்க்க உதவுகிறது, பேரா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது அது பெரிதும் உதவுவதாகவும் அவர் விவரித்தார்.

