
ஜொகூர் பாரு, அக் 5
ஜொகூர் மாநில ஜசெக தேர்தல் மற்றும் மாநாடு நாளை நடக்கிறது.
ஜொகூர் மாநில ஜசெக தேர்தலில் 15 பேர் கொண்ட செயலவை உறுப்பினர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
அனைத்துலக வாணிப தொழில் துறை துணை அமைச்சர் சின் தோங்கின் புத்ரி இஸ்கந்தார் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு அதிகாரி கண்ணன் மாரியப்பன் இம்முறை செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முக்கிய தலைவர் ஆவார்.
ஜசெக கட்சியை வலுப்படுத்தவும் மக்கள் நலனுக்காக ஜொகூர் மாநில ஜசெக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று அவர் சொன்னார்.

