சலவை கடை அரசு, தனியார் பணியிடங்களில் புகைப்பிடிக்க தடை: சுகாதார அமைச்சர் அறிவிப்பு

புத்ரா ஜெயா: அக் 5-
அடுத்தாண்டு முதல் சலவை கடை வளாகங்கள், அரசு, தனியார் பணியிடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பொது சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 2024 (சட்டம் 852) அமலாக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
.

சட்டம் 852ன் கீழ் மொத்தம் 28 இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அரசிதழில் வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி சுட்டிக் காட்டினார்.

சலவை கடை வளாகங்களில் இந்தப் புகைப்பிடித்தல் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியான காரணம் என்னவென்றால் அங்கு அதிகளவில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles