நாஞசுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்!

சுங்கை சிப்புட், அக். 5- நாளை அக்டோபர் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் 13 மில்லியன் வெள்ளியில் கட்டப்பட்டுள்ள சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை அதிகாரபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவர்கள் அறிவித்த ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளில்
சுங்கை சிப்புட் ஈவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒன்றாகும்.

இப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இப்பள்ளி வாரியத்தின் தலைவரான திரு. தியகராஜான் கூறுகையில் பேராக் மாநிலத்திலேயே மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவெடுக்க உள்ள இப்பள்ளி சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒன்று.

இது பிரதமரால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்படுவது பெருமைக்குரியது.

அதனால் திறப்பு விழாவை மிகவும் சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடாகி வருவதாக கூறினார்.

இப்பள்ளி நாம் எதிர்பார்க்கும் சாதனை பள்ளியாக உருவாக, உள்ளூர் மக்களின் ஆதரவு அதிகம் தேவை. இதன் திறப்பு விழாவை சிறப்பிக்க எல்லா மக்களின் ஆதரவும் அதிகம் தேவை என்பதால் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles