இஸ்ரேலை வேரோடு அழிப்போம் : ஈரான் தலைவர் காமெனி ஆவேசம்!

டெஹ்ரான் : அக் 5
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் ராணுவத்துக்கு, அந்நாட்டின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமெனி நேற்று பாராட்டு தெரிவித்தார்.

தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், யூதர்களை வேரோடு அழிப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போரில், ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் களம் இறங்கினர்.

இதை தொடர்ந்து, லெபனான் மீது கடுமையான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது .

சில தினங்களுக்கு முன்னர் ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles