தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சருடன் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தினர் முக்கிய சந்திப்பு!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 5-

தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நி சிங் அவர்களுடன் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்கள் நேற்று முக்கிய சந்திப்பு நடத்தினர்.

இந்த சந்திப்பில் விஸ்மா ஆர்.டி.எம் இல் சங்கத்தின் அலுவகம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

.ஆதோடு தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் மற்றும் துணை அமைச்சரும் மருத்துவ ஒய்வில் இருக்கும் சங்கத்தின் உறுப்பினர்கள் , முதுமை காரணமாக ஒய்வில் இருக்கும் உறுப்பினர்களை தீபாவளிக்கு முன் நேரடியாக சந்தித்து உதவி செய்ய வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் தலைமையில் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் மற்றும் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், தகவல் தொடர்பு துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன் ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவிகளை வழங்க முன் வந்திருக்கும் தகவல் தொடர்பு துறை அமைச்சுக்கு சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles