பினாங்கு பிறை கிராமத் தலைவராகஸ்ரீ சங்கர் நியமனம்!

ஜோர்ஜ் டவுன், அக் 11-
பினாங்கு மாநில பிறை சட்டமன்ற தொகுதியின் கிராமத் தலைவராக ஸ்ரீ சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர், பினாங்கு இந்தியர் கிளப் தலைவர் மற்றும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவராக வலம் வரும் ஸ்ரீ சங்கர் ஒரு நாடறிந்த சமூக சேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநில மக்களுக்கு இனம் பாராமல் சேவையாற்றி வரும் ஸ்ரீ சங்கர் தற்போது பிறை சட்டமன்ற தொகுதி கிராம தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பினாங்கு கொம்தார் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பினாங்கு மாநில துணை முதல்வர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமிட்டிடம் இருந்து அவர் சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூவும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

பிறை சட்டமன்ற தொகுதி கிராம தலைவராக ஸ்ரீ சங்கர், செயலாளராக ரகுநாதன் மற்றும் பொருளாளராக சேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles