இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுக்குஅரசாங்கம் 13 கோடியை ஒதுக்கி உள்ளது! டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 13-
இந்திய சமுதாயம் கூட்டுறவு கழகங்கள் மூலம் முன்னேற்றம் காண வேண்டும்.

அகவே இந்திய சமுதாயம் கூட்டுறவு கழகத்தில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் 419 கூட்டுறவு கழகங்கள் மட்டுமே இந்தியர்களுக்கு உள்ளது

நாட்டில் மொத்தமாக 16,000 கூட்டுறவு கழகங்கள் வழி 72 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆனால் 419 கூட்டுறவு கழகங்கள் மூலம் 2 லட்சத்து 50,000 இந்தியர் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த எண்ணிக்கை போதாது.
தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் போல் நமது இதர கூட்டுறவு கழகங்கள் முன்னேற்ற வேண்டும்.

கூட்டுறவு கழகங்கள் வழி இந்திய சமுதாயம் மேன் மேலும் பயன் அடைய வேண்டும்.

அதற்காக இந்திய கூட்டுறவு கழகங்கள் தட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்திய கூட்டுறவு கழக மாநாடு மிகப்பெரிய அளவில் தமது அமைச்சின் கீழ் நடத்துவதாக அவர் சொன்னார்.

இதுவரை நாட்டில் இதுபோன்ற ஒரு மாநாடு நடத்தப்படவில்லை.

இதுவே முதல் முறை என்பதால் இந்திய கூட்டுறவு கழகங்கள் முன்னேற்றத்தை நோக்கி வெற்றி நடை போட வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் இந்திய சமுதாயத்தின் சிறு தொழில் முனைவோருக்கு பல வகைகளில் கடனுதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இன்று பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் மலேசிய இந்தியர் கூட்டுறவு கழகத்தின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles