ஆகாய படையில் சேவையாற்றி பணி ஓய்வு பெற்ற இந்திய வீரர்களின் சமுக நலன் காக்க கூட்டுறவுக் கழக அமைக்க திட்டம்

அரச மலேசிய ஆகாய படையில் சேவையாற்றி பணி ஓய்வு பெற்ற இந்திய வீரர்களின் நலன் தொடர்ந்து காக்கப்படவேண்டும என்று வலியுறுத்தப்பட்டது.

ஆகாய டை, போலீஸ் , இராணுவ மற்றும் அரச மலேசிய கடற் படையினர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆகாய விமானப. படையில் சேவையாற்றி பணி்ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒன்று கூடல் நிகழ்வு ஈப்போவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சிறப்புடன் நடைபெற்றது.

நாட்டில் பல்வேறு அதிகாரிகள் ஒன்று திரண்ட் இந்த நிகழ்வு ஆகாயப் படைபில் காப்பரலாக பணியாற்றி இன்று வர்த்தகராக உள்ள டத்தோஸ்ரீ இருதயநாதன் கேபரல் தலைமையில் நடைபெற்றது.

முத்த உறுப்பினர்கள் ஐவர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வு முறையே தொடக்கி வைத்தனர்.

ஆகாய படை பிரிவில் காப்ரலாக சேவையாற்றி பணி ஓய்வு பெற்ற மணிமாறன் லட்சுமணன் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடை பெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ இருதயநாதன் கேபரல் , ஆகாய படையின் பணியாளர்களின் பங்களிப்பு் முக்கியமாக விளங்குகிறது. ஆகவே அவர்களின் சமுக நல சேவையில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பணி ஒய்வு பெற்ற ஆகாய படை் பிரிவில் சேவையாற்றிய முன்னாள். அதிகாரிகளின் உறவுகள் வலுபெற இத் போன்று ஒன்று் கூடல் நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படவேண்டும்

இவர்களின் நலன் காக்க கூட்டுறவு கழகத்தை அமைக்கவேண்டும். அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கவேண்டும்.்

விரைவில் இந்த கூட்டிறவுக் கழகத்தை அமைக்க இதற்குறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மணிபாறன லட்சுமணன் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியதுடன் இது போன்ற ஓன்று கூடல் நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படும் என்று கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles