சிம்பாங் லீமா இந்து மயானத்தின் நுழைவாயில் வளைவை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்! ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அறிவிப்பு

கிள்ளான், அக். 14 – இங்குள்ள சிம்பாங் லீமா இந்து மயானத்தின்
நுழைவாயில் வளைவை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கையை தாம்
எடுக்கவுள்ளதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.

அந்த இடுகாட்டின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த அந்த வளைவு
இலகு ரயில் திட்ட (எல்.ஆர்.டி.) கட்டுமானப் பணிகள் காரணமாக
அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எல்.ஆர்.டி. திட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அகற்றப்பட்ட அந்த
அலங்கார வளைவை மீண்டும் அமைப்பதற்கு சிலாங்கூர் இந்திய சமூக
நல மரண சகாய இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டி.தட்சணாமூர்த்தி
கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் படி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு
நடத்தி அந்த அலங்கார வளைவை மீண்டும் அமைப்பதற்கான
நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் இந்திய சமூக நல மரண சகாய இயக்கத்தின் ஏற்பாட்டில்
நேற்று இங்குள்ள சிம்பாங் லீமா இந்த மயானத்தில் நடைபெற்ற இந்து
கல்லறை விழா கூட்டு துப்புரவு இயக்கத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்து மயானங்களைப் பராமரிப்பது மற்றும் ஆதரவற்றோரின்
பிரேதங்களை அடக்கும் செய்வது போன்ற தன்னலமற்றப் பணிகளை
மேற்கொண்டு வரும் இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களை தாம் பெரிதும்
பாராட்டுவதாக அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles