திருவிழா காலங்களில் மக்கள் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களுக்கு திடிரென விலை ஏற்றம் !.பினாங்கு இந்து இயக்கம் அதிர்ச்சி !

இவ்வாண்டுக்கான தீபாவளித் திருநாள் இம்மாதம் 31ம் தேதி வரும் பட்சத்தில் அனைத்து இந்துப் பெருமக்களும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து விட்டு, அதில் அலங்காரங்களையும், அழகுப் பொருட்களும் தொங்கவிடுவதும் மேலும், அன்றைய திருவிழா தினத்தில் அருசுவை மிகுந்த உணவுகளும் தயார் செய்து அவைகளை இன்ப சுவையோடு உண்டு மகிழ்வதும் வழக்கமான செயல்களே.

இந்த திருவிழா கால மோட்சத்தில் மூழ்கிக்கிடக்கும் இந்தியர்களுக்கு தேவைப் படும் வீட்டுப் பொருட்களை ‘லிட்டில் இந்தியா’ கடை சந்தைகளில் வாங்கச் சென்ற போது தான் காத்திருந்தது பெரும் அதிர்ச்சிக் !.
அது என்னவென்றால் – தேவைப் படும் அனைத்துப் பொருட்களிலும் ‘விலை ஏற்றம்’.
ஆம்! அண்மையில் பினாங்கு இந்து இயக்கத்திற்கு கிடைத்த பலதரப்பட்ட புகார்களில் இந்த திடிர் விலை ஏற்றப் புகார் சற்று அதிகம் எனலாம் !.
இப் புகார்களை தொடர்ந்து இயக்கப் பொறுப்பாளர்கள் கடைகளில் மேற்கொண்ட தேடலில் இந்த விலை ஏற்றம் உண்மையென அறிய முடிந்தது.
இதனுடன் மேலும் ஒரு தகவலும் கூடுதலாகக் கண்டறியப்பட்டது!. அது என்னவென்றால் – தரமற்றப் போலிப் பொருட்களும் அதிகம் ஊடுருவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது தான் !!. இந்த விலை ஏற்றம் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு மேலும் பல மடங்கு விழுக்காடு விலை ஏற்றம் கண்டுள்ளது !.

இந்த திருவிழா கால பட்டசத்தில், குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து இங்கு இறக்குமதியாகும் சமையல் திரவியங்களும், வீட்டுப் பொருட்களும் வழக்கத்திற்கு மாறான விலையில் ஏற்றம் செய்து விற்கப் படுகிறது என்பது மிகவும் உண்மை.

மக்களின் வாழ்வாதாரம் தற்போது அதிக சுமைகளோடும், அதிக எதிர்பார்ப்புக்குள்ளோடும் உள்ள இக் கால கட்டத்தில் ஒவ்வொரு சமயத்தினர்களின் திருவிழாவின் போதும் வியாபாரிகள் தங்களின் விற்பனைப் பொருட்களுக்கு அதிக விலையில் ஏற்றம் செய்து கொண்டு விற்று வருவது கண்டறியப்பட்டது.

கீழ்க் காணும் விலைப் பட்டியலில் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு விலை ஏற்றத்தை காண்பீர் ! அதிலும் திடிரென ‘நூறு விழுக்காடு’ விலை ஏற்றம் கண்டுள்ளது ‘ஏலக்காய்’ திரவியம் !
கடந்தாண்டு அதன் விலை 40 ரிங்கிட் ஒரு கிலோ. ஆனால், தற்போது அதன் விலை 140 ரிங்கிட் ஒரு கிலோ !!.

நம் மலேசிய நாணய மதிப்பு அதே சென்ற ஆண்டைப் போலவே நாணய மாற்றுச் சந்தைகளில் உள்ள போதும் இந்த விலை ஏற்றம் தேவையில்லாத ஒன்றே !. ஆகவே, பிரதமர் துறை அமைச்சு இந்த விலை ஏற்றம் குறித்து நன்கு பரிசீலித்து அதற்க்கான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு இந்து இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
மேலும், இத் திருவிழா காலங்களில் இந்துக்கள் நன்கு திட்டமிட்டு பொருட்கள் வாங்குவதும், வீட்டுச் செலவுகள் செய்வதையும் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு இந்து இயக்கம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
அதிகப்படியாக செலவு செய்யும் பட்சத்தில் பணம் பற்றாக் குறைவினால் ‘வட்டி முதலைகளிடம்’ கடன் வாங்கி பின்பு மிகவும் அவதிப்படுவார்கள். இதனை ஒரு அறிவுரையாக ஏற்காதவர்கள் பின்பு வாழ்நாள் முழுவதும் துன்பம் அடைவார்கள் என்பதும் உண்மை !.
முதலில் ‘சிக்கன வாழ்வாதாரம்’ மிகவும் சிறமமானதாகத் தான் இருக்கும், ஆனால், அதுவே நன்கு பழகிவிட்டால் நல்ல பயன் தரும் என்பதும் உண்மை.

பினாங்கு இந்து இயக்கம் அனைத்து இந்துக்களுக்கும் இவ்வாண்டு ‘தீபாவளியை’ மகிழ்ச்சியோடு கொண்டாட வாழ்த்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles