கோலா குபு பாருவில் 13 ஆதரவற்ற சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு புத்தாடைகள்!

கோலகுபு பாரு, அக்.22-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் ஆதரவுடன் 13 ஆதரவற்ற சிறுமிகள் மற்றும் பெண்கள் ரவாங்கில் உள்ள துணிக்கடையில் புதிய ஆடைகளை வாங்க அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் தெய்வீக வாழ்க்கை சங்கம், கோலாகுபு பாரு நலன்புரி இல்லத்தில் வசிக்கும் 13 சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை கோலா குபு பாருவில் உள்ள நலன்புரி இல்லங்களில் ஒரு வருடாந்திர நிகழ்வாக மறைந்த லீ கீ ஹியோங்கால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரிய திட்டமாகும் என பாங் சோக் தாவ் கூறினார்,

“மேலும் லீ கீ ஹியோங் எப்போதும் நலன்புரி இல்லங்களுக்கு உணவு மற்றும் நிதி போன்ற முக்கியமான உதவிகளை வழங்கி வந்தார் குறிப்பாகக் கோவிட் 19 போது ஆகும் என சோக் தாவ் தெரிவித்தார்.

“எனவே, லீ கீ ஹியோங் மரபைத் தொடர வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று அவரை தொடர்புகொண்டபோது கூறினார்.

குழந்தைகள் பண்டிகைக் கால மகிழ்ச்சியை அடைவதை உறுதி செய்வதற்காக, இந்தத் திட்டத்தை வருடாந்திர நிகழ்வாக தொடர எண்ணம் உள்ளது என்றார்.

“இந்த சிறிய நன்கொடை அவர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் என்று நம்புகிறேன், மேலும் இந்த பண்டிகை அன்பு, அரவணைப்பு மற்றும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும்,” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles