
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சடங்கில் பதவி ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா தலைமையில் நடைபெற்ற
மலாய் ஆட்சியாளர்கள் மன்ற கூட்டத்தில்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் மாலையில் 5.00 மணிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் பிரதமராக பதவியேற்று கொண்டார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது போல் எனக்கு பிரதமர் சம்பளம் வேண்டாம் என்று மீண்டும் உறுதி அளித்தார்.

