
சிலாங்கூர் மாநிலத்தில் உயர் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 33 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது
இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த மானியம் ஒதுக்கப்படுகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 20 லட்சம் வெள்ளி இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
வரும் ஆண்டில் உயர் கல்வி மற்றும் கல்லூரிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் 33 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

