
மக்களை பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அடுத்த வாரம் அரசாங்க ஏஜென்சிகளை சந்திக்க விரும்புகிறேன்.
மக்களை வாட்டி எடுக்கும் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு கண்டிப்பாக தீர்வு காணப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட அரசு ஏஜன்சிகளை விரைந்து சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று அவர் சொன்னார்.
வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாகும் என்று கூறிய அவர் இப்போது மலேசிய ரிங்கிட் மதிப்பு மற்றும் பங்கு சந்தை கள் உயர்ந்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

