சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 98 தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி மானியம்! ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் வரவேற்பு

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 98 தமிழ்ப்பள்ளிகளுக்குமீண்டும் 50 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு 80 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 60 லட்சம் வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது இம்முறை 80 லட்சம் வெள்ளி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் வழி அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மிகப் பெரிய அளவில் மானியம் கிடைக்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சிலாங்கூர் மாநில இந்து கோவில்களுக்கு 18 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு இந்த தொகை அதிகரிக்கும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் ஐ சீட் திட்டத்திற்கு பத்து லட்சம் வெள்ளி மானியம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles