

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செராஸ் பெமூடா கிளப் ஏற்பாட்டில் இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நட்பு முறை கால்பந்துப் போட்டியில் லொக் இயூ, ஸ்ரீ ஜொகூர், சன்பெங், சினாரான் முத்தியாரா மற்றும் செராஸ் பெமூடா கிளப்புகள் பங்கேற்று கலக்கின
கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுபோன இந்த கால்பந்து போட்டி இம்முறை இன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றது என்று போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் கனகசபை தெரிவித்தார்.
செராஸ் வட்டாரத்தில் உள்ள இந்தியர் கிளப் மத்தியில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக கனகசபை தெரிவித்தார்.

இந்த கால்பந்து போட்டி வெற்றி பெறுவதற்கு கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ வீராமணி முழு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

