குடும்பங்களை தத்தெடுத்து தலா ஆயிரம் வெற்றிக்கான தீபாவளி புத்தாடைகளை வாங்கி கொடுத்தது பேருதவி புரிந்த டிக்கம் குழுவினர்!

கோலாலம்பூர் அக் 27-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி40 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சிறப்பு அதிகாரி டிக்காம் தலைமையிலான குழுவினர் பேருதவி புரிந்துள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வட்டாரத்தில் மிகவும் வரிய நிலையில் வாழும் குடும்பங்களை தேர்வு செய்து தலா ஆயிரம் வெள்ளியில் அந்த குடும்பங்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி பலகாரங்களை அவர்கள் வாங்கி கொடுத்து உதவி புரிந்துள்ளனர்.

நேற்று திருமதி கோகிலவாணி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளும் புத்தாடைகளை பெற்றுக் கொண்டதில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சகோதர் பூவன் மற்றும் சந்திரிகா ஆகியோர் இந்த நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்.

வரிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு தீபாவளி புத்தாடைகளை வாங்கிக் கொடுப்பதற்கு உதவி புரிந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களுக்கு டிக்கம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles