வசதி குறைந்தவர்களும் மகிழ்ச்சிப் பெற ‘தீபாவளி அன்பளிப்பு !

பினாங்கு அக் 27–
வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த திருநாளில் வசதி குன்றிய குடும்பங்களும் மகிழ்ச்சிப் பெற உதவுகிறது இந்தத் திருநாள்.

சகல வசதிகளையும் வைத்திருப்போர்களுக்கு ஒவ்வொரு நாளும் திருநாளே!. ஆனால், ‘திருநாள்’ என்பதை வெறும் வார்த்தை அளவில் மட்டுமே பார்க்கக்கூடியவர்கள் தான் இந்த வறுமையில் வாழும் ஏழைக் குடும்பங்கள். இவர்களுக்கு தக்க கால கட்டத்தில் உதவுவது என்பது மிகவும் அரிது.

அவ்வகையில், அண்மையில் பினாங்கு இந்து இயக்கமும், பினாங்கு நுண்கலைக் கோயில் அமைப்பின் கீழ் இயங்கி வரும் சிவசாந்தா தர்ம மருத்துவ குழுவினர்களும் ஒன்று சேர்ந்து சுமார் 150 ஏழைக் குடும்பங்களுக்கு ‘தீபாவளி அன்பளிப்பு’ செய்தனர்.

கடந்த 20-10-2024 ல், பினாங்கு மஸ்யாராகாட் பெஞ்யாயாங் பொது நோக்கு மண்டபத்தில் இந் நிகழ்வு காலை 10 மணிக்கு நடைபெற்றது.

ஜுலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சனிஸ்வரர் நேத்தாஜி ராயர் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை தந்து அனைத்து குடும்பங்களுக்கும் அந்த வீட்டுப் பொருட்களையும் ரொக்க பண முடிப்புக்களையும் எடுத்து வழங்கினார்.

ஒவ்வொரு அன்பளிப்புப் பொட்டனத்திலும் சுமார் 35 மாதரியான 180 ரிங்கிட் பெருமானமுள்ள வீட்டுப் பொருட்களும் அதனுடன் இனிப்பு பலகாரங்களும் கூடவே 50 ரிங்கிட் ரொக்கப் பண முடிப்பும் வழங்கப்பட்டது.

இதனுடன் பொருட்களை பெற்றவர்கள் தங்களுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தால் அவர்களுக்கும் தலா ஐந்து ரிங்கிட் கவரில் வைத்து வழங்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ‘சைவ’ மதிய உணவும் பரிமாறப்பட்டது.

வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உண்ணத நன்கொடை நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து உதவிய இந் நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளர் மாண்புமிகு சனீஸ்வரர் நேதாஜி ராயர் (ஜுலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்), செனட்டர் மாண்புமிகு டாக்டர் லிங்கேஸ்வரன், பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் மாண்புமிகு ஜக்டிப் சிங் டியோ இவர்களை பிரதிநிதித்து மாண்புமிகு டத்தோ இராமச்சந்திரன், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருமதி சர்லீனா அப்துல் ரசிட், பினாங்கு ம.இ.கா தலைவர் மாண்புமிகு ஜெ.தினகரன், பினாங்கு ‘மேயர்’ மாண்புமிகு இராஜேந்திரன் அந்தோனி, சுங்ஙைப் பினாங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லிம் சுய் கிம் மற்றும் தஞ்சோங் பூங்ஙா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சைரில் கீர் ஜோகாரி ஆகியோர்களுடன் ‘லோடஸ்’ நிறுவன சிறப்பு அதிகாரிகளும் இவர்களுடன் இந் நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கிய பிரமுகர்களும், மதிய சைவ உணவிற்கு நன்கொடை தந்தவர்களும் ஒன்று சேர்ந்து வருகைத் தந்து நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர்.

இப் பயனுள்ள நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் தலைவர் டத்தோ ப.முருகையா இயக்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

1 COMMENT

  1. ஏழைகளின் சிரிப்பில் சிவம் உறைகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles