தீபாவளி பண்டிகை முன்னிட்டு பங்சார் இராமலிங்கேஸ்வரர் ஆலய சார்பில் 250 பேருக்கு தீபாவளி பற்று சீட்டுகள் வழங்கப்பட்டது!

கோலாலம்பூர் அக் 27-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்சார் இராமலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் நலன அபிவிருத்தி சார்பில் இன்று 250 பேருக்கு தீபாவளி பற்று சீட்டுகள் வழங்கப்பட்டது.

ஒருவருக்கு தலா 100 வெள்ளி வீதம் 250 பேருக்கு இந்த தீபாவளி பற்று சீட்டுகள் மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் பங்சார் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கும் தல 100 வெள்ளி வீதம் பற்றுச் சிட்டுகள் வழங்கப்பட்டது.

இன்று பங்சார் இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் இந்த பற்றுச் சிட்டுகளை நேரடியாக எடுத்து வழங்கினார்.

பங்சார் தமிழ்ப் பள்ளி வாரியத் தலைவர் டத்தோ சங்கு பிள்ளை (
டத்தோ சங்கர்),
இராமலிங்கேஸ்வரர் ஆலய தலைவர் வேலாயுதம் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழா வெற்றி பெற உதவிய
டத்தோ சங்கரா நாராயணன், டத்தோ ஆனந்த குமார் மற்றும் டத்தோ விஜியன் ஆகியோரும் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles