தீபாவளி பண்டிகை முன்னிட்டு200 குடும்பங்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கி பேருதவி புரிந்தார் குயில் ஜெயபக்தி உரிமையாளர் டத்தோ டாக்டர் செல்வராஜ்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 29-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் 200 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

நேற்று குயில் ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குயில் ஜெயபக்தி நிறுவனம் ஏழை எளிய மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டும் 200 பேருக்கு டத்தோ டாக்டர் கு செல்வராஜ் உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

இவரின் சேவையை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles