அமைச்சரவையில் இடம்பெறப் போகும் இந்திய தலைவர்கள் யார்?
அடுத்த வாரத்தில் விடை கிடைக்கலாம்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் இடம் பெற போகும் இந்திய தலைவர்கள் யார் என்பது அடுத்த வாரத்தில் விடை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பத்து இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில் ஜசெக மற்றும் கெஅடிலான் சார்பில் அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் யார் என்பது பெரும் கேள்வியை எழுப்புகிறது.

இருப்பினும் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் 98,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வீ.கணபதிராவ், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கேசவன், ஈப்போ பாராட்டில் வெற்றி பெற்ற குலசேகரன், பத்து காஜாவில் வெற்றி பெற்ற சிவகுமார் மற்றும் பத்து நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பிரபாகரன் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles