பிரான்ஸ் அதிரடி தொடர்கிறது! மெஸ்சியின் கோலால் அர்ஜென்டினா வெற்றி

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகச் சாம்பியன் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது

ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

இதற்கு பதிலடியாக 68 ஆவது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார்.

எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் கோல் அசத்தினார்.

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே அதிகாலை நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2- என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.

அர்ஜெண்டினா அணியின் கோல்களை கேப்டன் மெஸ்ஸி, பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles