சபரிமலையில் அலைமோதும் கூட்டம்- ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

17-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்

கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

நேற்று சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் 85 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் இரவு வரை காத்திருந்து தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles