
கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் டாக்டர் முகமட் சோபியை ஆதரித்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளனர்.
தேசிய முன்னணி சார்பில் டத்தோ சிவராஜ் போட்டியிடுகிறார்.
பெரிக்கத்தான் நேஷனல் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
இப்போது பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் சோபியை ஆதரித்து பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

