

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செராஸ் பெமூடா கிளப் ஏற்பாட்டில் நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நட்பு முறை கால்பந்துப் போட்டியில் லொக் இயூ, ஸ்ரீ ஜொகூர், சன்பெங், சினாரான் முத்தியாரா மற்றும் செராஸ் பெமூடா கிளப்புகள் பங்கேற்றன.
இந்த போட்டியில் செராஸ் பெமூடா கிளப் அனைத்து ஆட்டங்களில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை வென்றது.
செராஸ் லொக் இயூ இரண்டாவது இடத்தையும் சினாரான் முத்தியாரா 3 ஆவது இடத்தையும் ஸ்ரீ ஜொகூர், சன்பெங்,4 ஆவது இடத்தையும் பிடித்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுபோன இந்த கால்பந்து போட்டி இம்முறை இன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றது என்று போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் கனகசபை தெரிவித்தார்.
செராஸ் வட்டாரத்தில் உள்ள இந்தியர் கிளப் மத்தியில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக கனகசபை தெரிவித்தார்.
வெற்றி பெற்ற குழுக்களுக்கு முன்னாள் தேசிய ஆட்டக்காரர்களான கோல் கீப்பர் எம். பவளமணி, கே. கனகராஜா ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
இளம் தொழிலதிபர் வினோத் சந்திரன், கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ வீராமணி, டத்தோ வீரன், கென்னடி கணேசன் உட்பட பலர் போட்டி வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் செராஸ் பெமூடா கிளப் பல அனைத்துலக போட்டியில் பங்கேற்று சாதனை படைக்க காத்துக் கொண்டிருப்பதாக குழு நிர்வாகி சைமன் தெரிவித்தார்.

