மக்களை பாதிக்கும் வாழ்க்கை செலவீனங்கள் பற்றி விவாதிக்க சிறப்பு அதிரடி கூட்டத்தை கூட்டினார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

நாட்டு மக்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தலைமை ஏற்றார் .

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுகி அலி, பேங்க் நெகாரா மலேசிய ஆளுநர் டான்ஸ்ரீ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ், புள்ளியியல் திணைக்கள அதிகாரிகள், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்கள் அமைச்சு, நிதி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமான இந்த சந்திப்பு கூட்டம் மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்க்கை செலவீனங்கள் மக்களை வாட்டி எடுக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவை இருப்பதால், வாழ்க்கைச் செலவு தொடர்பான கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles