

பேராக் மாநிலத்தில் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஈப்போ – லமூட் சின்ன கருப்பர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலையில் ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன், புந்தோங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் துளசி மனோகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாக இது விளங்குகிறது.
இந்திய சமுதாயம் சமயம், கல்வி பொருளாதார துறைகளில் சிறந்து விளங்க முனைப்பு காட்ட வேண்டும் என்று சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

