

மலேசியாவுக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட புரூணை சுல்தான் hassanal bolkiahவை சுபாங் ராணுவ ஆகாயப்படை விமான தளத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்று மகிழ்ந்தார்.
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்றதைத் தொடர்ந்து அவரை சந்திக்க புருணை சுல்தான் இன்று சிறப்பு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 11.40 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்த புரூணை சுல்தானை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர் கொண்டு வரவேற்றார்.
பின்னர் புரூணை சுல்தான் தனது புதல்வரும் பட்டத்து இளவரசருமான அப்துல் மாத்தின் போல்கியாவின் பி எம். டபிள்யூ காரை ஓட்டி ஸ்ரீ பெர்டானாவை நோக்கி புறப்பட்டார்.
காரின் முன் இருக்கையில் டத்தோஸ்ரீ அன்வாரும் பின் இருக்கையில் புரூணை பட்டத்து இளவரசரும் அமர்ந்து கொண்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியாக மலேசியாவுக்கு வருகை புரிந்த புரூணை சுல்தான் இப்போது டத்தோஸ்ரீ அன்வாரை காண வருகை புரிந்துள்ளார்.
மலேசியா புரூணை இடையிலான இரு வழி உறவுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில் புரூணை சுல்தான் வருகையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வர்ணிக்கப்படுகிறது.

