கோலாலம்பூர், நவ. 13-
நேற்று காலை கோலாலம்பூர் ஜாலான் கிள்ளான் லாமாவிலூள்ள தாமான் ஓயுஜியில் உள்ள வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காலை 8.48 மணியளவில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப் பட்டது, பின் அச்சம்பவம் தொடர்பில் 53 வயதான அப்பெண்ணின் மகன் கைது செய்யப்படார் என கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தடயவியல் மையத்திற்கு அனுப்பப்பட்டது மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.
“சம்பவத்தின் நோக்கத்தை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
மேலும், இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் காவல்துறை 03-2115999 அல்லது பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறையை 03-22979222 தொடர்பு கொள்ளவும்.மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா