
ரியோ டி ஜெனிரோ: நவ 19-
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகியா நாடுகளுக்கு சென்றுள்ளார்.
நேற்று அவர் தனது நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசிலில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தார்.
அவருக்கு அந்நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில் பட்டினி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

