நைஜீரிய அழகி சிடிம்மாவை ஏன் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யவில்லை : நெட்டிசன்கள் கேள்வி

மெக்சிகோ : நவ 19- மெக்சிகோவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் மகுடம் சூடியுள்ளார்.

ஆனால் இது இன வெறியுடன் நடத்தப்பட்ட அழகி போட்டி என சமூக வலைத்தளங்களில் பல்லாயிரம் பேர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டியில் 73ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.

மொத்தம் 125 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

பரபரப்பான இறுதிச் சுற்றில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 21 வயதான விக்டோரியா கெயர் 2024ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

இவர் டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரபஞ்ச அழகியாவார்.

இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது
.

இந்த நிலையில், சிடிம்மா அடெட்ஷினாவை பிரபஞ்ச அழகியாக ஏன் தேர்வு செய்யவில்லை என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த அழகி போட்டி நேர்மையற்ற முறையிலும் இனவெறியோடும் நடத்தப்பட்டதாக ஏராளமானோர் குற்றம் சாட்டுகின்றனர்.

நீயே வெற்றி நட்சத்திரம் என்று நைஜீரிய அழகி நிடிம்மா அடெட்ஷினாவை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles