நாளை செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் தீபாவளி பொது உபசரிப்பு!

ஷா ஆலம், நவ. 22 – நாளை நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை செந்தோசா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு செந்தோசா சமூக சேவை அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

இரவு 7.31க்கு தொடங்கும் இந்த பொது உபசரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் விருந்து உபசரிப்போடு கலை கலச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles