நாளை உலு லங்காட் நாடாளுமன்ற நிலையிலான தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு!

செமினி, நவ.21-
உலு லங்காட் நாடாளுமன்ற ரீதியிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நாளை 23ஆம் தேதி சனிக்கிழமை செமினி சமூக மண்டபத்தில் மாலை 6.00 தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெறவிருக்கிறது.

நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் கொக்கோ நந்தா, மில்லனியம் ஆர்ட்ஸ் குழுவினர், லோக்கப் குழுவினர் என பல உள்நாட்டுக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாக சிலாங்கூர் மாநில சமூகநல மற்றும் தொண்டூழிய சங்கத்தின் (வேவ்) ஆலோசகர் ராஜன் முனுசாமி தெரிவித்தார்.

இதில் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சான் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொள்வார்.

இந்த நிகழ்வு உலு லங்காட் நாடாளுமன்றம் மற்றும் வேவ் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வில் இந்திய பாரம்பரிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் காஜாங், செமினி, உலு லங்காட் என சுற்றுப் பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்வில் அதிர்டக்குலுக்கும் உண்டு.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன் அர்ச்சுனன், சந்திரன் ராமசாமி, செமினி இந்திய சமூகத் தலைவர் நடேசன் ஆகியோரும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
ஆகையால் இதையே அழைப்பாக ஏற்றுச் சுற்றுப் பகுதியிலுள்ள இந்தியர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக உலு லங்காட் தொகுதி பிகேஆர் தலைவருமான ராஜன் முனுசாமி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles