காஸாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம்!

ஜெனிவா, நவ 22-
மனித விரோத போர் குற்றத்துக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போரில் பாலஸ்தீன மக்களின் உயிரிழப்பு தொடர்பாக இஸ்ரேல் சமர்ப்பித்த விளக்கங்களும் நிராகரிப்பு.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், நெதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர், காசா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றின் விநியோகத்தை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தடை செய்து, போர் குற்றம் இழைத்ததற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்பட்ட மேல்முறையிட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles