
சுங்கைபட்டாணி, நவம்பர் 26–
கெடா மாநில மடானி தீபாவளி கொண்டாட்டம் மிக சிறப்பாக லிப் சியோங் கோர் மண்டபத்தில் நடைபெற்றது.
கெஅடிலான் (பிகேஆர்) கட்சியின் மெர்போக் தொகுதித் தலைவர் வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1,500 பேர் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிகேஆர் கட்சியின் தேசிய துணை பொதுச் செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், பிரதமரின் பிரதிநிதி எம். சண்முகம், மற்றும் சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் முகமாட் தஃபிக் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் கிடைத்த மக்களின் ஆதரவு பிகேஆர் கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வரவிருக்கும் பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சிக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நிகழ்வில் பங்கேற்ற எஸ். ஜோவேல், விஜியகோபால், மற்றும் கிராமியத் தலைவர் எஸ். பரமசிவம் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையையும், உற்சாகத்தைச் சுடர்விடும் வகையில் அமைந்தது.

