ஐபிஎல் மெகா ஏலம் ! ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் புவனேஷ்வர் குமார்!

ஜெட்டா: நவ 26-
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடந்தது.

மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் 72 வீரர்கள் மொத்தமாக 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது.

ஸ்ரேயாசை ரூ.26 கோடியே 50 லட்சத்திற்கு பஞ்சாப் எடுத்தது.

தமிழக வீரர் அஸ்வின் 10 ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பிருக்கிறார்.

புவனேஷ்வர் குமாரை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினர் கடுமையாக போட்டியிட்ட நிலையில், ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது.

முகேஷ் குமாரை ரூ.2.40 கோடிக்கு RTM-ஐ பயன்படுத்தி டெல்லி அணி தக்கவைத்தது.

ரூ.9.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் தீபக் சாஹர்.

ரூ.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஆகாஷ் தீப்.

ரூ.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் லாக்கி பெர்குசன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles