
ஜொகூர் பாரு, நவ 27-
நேற்று முன்தினம் நடந்த 2025-ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதம் தொடர் நாடாளுமன்ற தொடரில் ஜொகூர் புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹாய்ஜான் காயாட் அவர்கள் செம்போரோங் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு நிதி அமைச்சு நிதி ஒதுக்க வேண்டு்ம் என கோரிக்கையை முன் வைத்தார்.
இவரின் கேள்விக்கு கல்வி அமைச்சு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் அந்த பள்ளிக்கூடம் அரசாங்கம் முழு உதவி பெற்ற பள்ளி அல்ல.
எனவே அப்பள்ளியின் வாரியம் நிதி சேர்த்து அந்த பள்ளியை கட்டி கொள்ள வேண்டும் என அளித்த பதில் தமக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக சமூக ஆர்வலருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்கோத்த சட்டமன்ற இடைத்தேர்தலின் போது மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஓன் ஆப்பிஸ், மடோஸ் தமிழ்ப்பள்ளி வட பூலாய் (தாமான் யுனிவர்சிட்டி) பகுதிக்கும் மற்றொரு தமிழ்ப்பள்ளியான செம்புரோங் தோட்ட தமிழ்ப்பள்ளி தாமான் இம்பியான் வாட்டரத்திற்கு மாற்றப்படும் என அறிவித்தார் என்பது கூறிப்பிடதக்கது.
நிலம் வழங்கியதோடு தங்களின் பொறுப்பு முடிந்து விட்டது என மாநில முதல்வர் டத்தோ ஓன் ஆபீஸ்யும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான திரு ரவின்குமார் கிருஷ்ணசாமியும் நினைக்கக்கூடாது.
அந்த இம்பியான் இம்மாஸ் தமிழ்பள்ளியையும் மடோஸ் தமிழ்பள்ளியையும் அரசாங்க முழு உதவி பள்ளியாக தரம் உயர்த்தி அந்த இரு பள்ளிகளையும் கட்டி தர அவர்களும் குரல் எழுப்பி வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஏழை சமுதாயமான இந்திய சமுதாயமே நிதி திரட்டி அந்த பள்ளியை அமைக்க சொல்வது நியாயமில்லை என திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

