சென்னை: நவ 27-
‘பாடகி இசைவாணி மீது தவறு இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார்.
கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் சபரிமலை ஐயப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாட்டை பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.
எந்த மதத்தினரும் பிற மதத்தினரை இழிவுப்படுத்துவதை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார்.
இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இது குறித்து நிச்சயம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின், உறுதியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்
ஐ யம் சாரி ஐயப்பா… நான் உள்ளே வந்தால் என்னப்பா… என்று பாடகி இசைவாணி பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.