பிரேசில் பயணம் RM6.8 பில்லியன் ஏற்றுமதி திறனை உருவாக்கும்!

ரியோ டி ஜெனிரோ நவ 28-
பிரேசிலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மேற்கொண்ட முதல் பயணமானது அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு RM6.8 பில்லியன் (US$1.57 பில்லியன்) ஏற்றுமதி திறனை வெற்றிகரமாக உருவாக்கியது.

பிரேசிலில் உள்ள 28 முன்னணி நிறுவனங்கள் மற்றும் வணிக கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை தலைவர்களுடனான கலந்துரையாடல் விளைவாக ஏற்றுமதிக்கு சாத்தியமான கூறுகள் இருப்பதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“இது 58 தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது. இந்த கூட்டத்தின் மூலம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு RM6.8 பில்லியன் (US$1.57 பில்லியன்) ஏற்றுமதி திறனை உருவாக்க முடிந்தது,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு (O&G) சேவைகள், குறைக்கடத்திகள்,செம்பனை எண்ணெய், விண்வெளிக் கூறுகள், உணவு மற்றும் பான பொருட்கள் ஆகியவை அடங்கும்.

மலேசியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்தும் வணிக ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதிலும் இந்த பயணம் வெற்றியடைந்ததாக அவர் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles