
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து 51ஆவது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் இரண்டாவது கோல் அடித்து வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.
68ஆவது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் பி பிரிவில் 7 புள்ளிகளுடம் அந்த அணி முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

