பக்கத்தானில் திறமை வாய்ந்த 10 எம்.பி.க்கள் இருப்பதால்
ம இகாவுக்கு அமைச்சர் பதவி கேள்விக்குறியே!

தமது புதிய அமைச்சரவையில் இந்தியப் பிரதிநிதிகளை நியமனம் செய்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நிறையத் தேர்வுகள் உள்ளன.

குறிப்பாக கெஅடிலான் கட்சியில் 4 பேரும் ஜ.செ.க.வில் 6 பேருமாக மொத்தம் 10 பேர் பக்காத்தானின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் ம.இ.கா.வை அவர் எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது.

கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ், சிவகுமார், குலசேகரன், ராம் கர்ப்பால் சிங், ராயர், டத்தோ ரமணன், பிரபாகரன், யூனிஸ் வரன், கேசவன் ஆகிய இந்த 10 எம்பிக்கள் சிறந்த கல்வியறிவு, ஆற்றல் மிக்க, துடிப்பானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் வெறும் வாய்ப் பேச்சி வீரர்கள் அல்ல. எனவே அவர்களில் இருந்துதான் டத்தோஸ்ரீ அன்வார் தமதுத் தேர்வை செய்வார் என்பது உறுதி என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles